NFSU புதிய வேலைவாய்ப்பு 2024. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல துறைகளில் இணைப் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நேர்காணல் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
NFSU புதிய வேலைவாய்ப்பு 2024
அமைப்பு:
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம்
பணிபுரியும் இடம்:
தார்வாட், கர்நாடகா
காலிப்பணியிடங்கள் பெயர்:
இணைப் பேராசிரியர் (Associate Professor)
உதவி பேராசிரியர் (Assistant Professor)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
இணைப் பேராசிரியர் கணினி அறிவியல்/ சைபர் பாதுகாப்பு – 1
உதவி பேராசிரியர்,
தடய அறிவியல் – 1
சைபர் பாதுகாப்பு – 1
மின் பொறியியல் – 1
பொறியியல் கணிதம் – 1
சுற்றுச்சூழல் அறிவியல் – 1
மொத்த காலியிடங்கள் – 6
கல்விதத்தகுதி:
இணைப் பேராசிரியர் –
சம்சந்தப்பட்ட துறையில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பெற்றிருக்கவேண்டும் மற்றும் 8 ஆண்டுகள் ஆசிரியர் அல்லது ஆராய்ச்சி பணியில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மேலும், UGC-CARE பட்டியலிடப்பட்ட ஜர்னல்களில் குறைந்தபட்சம் ஐந்து வெளியீடுகள் இருக்கவேண்டும்
உதவி பேராசிரியர்-
சம்சந்தப்பட்ட துறையில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது,
இணைப்பேராசிரியர் – 50
உதவி பேராசிரியர் – 45
சம்பளம்:
ரூ.68,000 முதல் ரூ.1,94,000 வரை வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 04.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
நேர்காணல் விபரம்:
நாள் – 11.03.2024
நேரம் – 9 மணி
இடம்:
வால்மி வளாகம்,
உயர்நீதிமன்றத்திற்கு அருகில்,
பி.பி. சாலை, பேலூர்
இண்டஸ்ட்ரியல் ஏரியா,
தார்வாட், கர்நாடகா – 580011
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்த வாரம் வேலைவாய்ப்பு செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2024
SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024