நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் வீட்டிற்கு சோதனை ஓட்டம்,நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் ரைடு விட்ட நிலையில், தற்போது சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதாவது உபகரணங்கள் கொடுத்து உதவுதல், மூளைசலவை செய்தல், நிதி வசூல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி நெல்லை ஏர்வாடியில் பக்ருதின் அலி என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கோவை உக்கடம் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி அண்மையில் கோவை மாவட்டத்தில் நடந்த கார் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த 20 பகுதிகளில் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.