தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து மதுரை, கோவை, சென்னை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டத்திற்கு முரண்பாடான முறையில் நிதி பெற்றதாக கூறி என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தியது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது அவர் வீட்டில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் துரைமுருகன் வருகிற 7ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.