Home » சினிமா » நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

நடிகை நிதி அகர்வாவிற்கு கொலை மிரட்டல்.., மர்ம நபர் செய்த தகாத செயல்!!!

ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்விற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஈஸ்வரன் படத்தின்  மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை நிதி அகர்வால். அப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர், பூமி, கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார்.

அதன்படி, பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பாகுபலி பிரபாஸ் நடித்து வரும் ராஜா சாப் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் வெறும் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, இவருக்காக சென்னையில் ரசிகர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிதி அகர்வால் தற்போது ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசில்  புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னை பற்றி இணையத்தில் மர்ம நபர் ஆபாசமாக பேசி வருவதோடு, தனது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாக புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top