நீலகிரி - கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !நீலகிரி - கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

தற்போது நீலகிரி – கொடைக்கானல் இபாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மே மாதம் சுற்றுலா தளங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இபாஸ் எடுத்து வரும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் செப்டெம்பர் 30 ம் தேதியோடு இந்த இபாஸ் நடைமுறை முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. kodaikanal epass registration 2024 online

அந்த வகையில் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பிற மாவட்டங்களை சேர்த்த சுற்றுலா பயணிகளுக்கான இபாஸ் நடைமுறை நேற்றோடு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாரு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். Nilgiris – Kodaikanal ePass procedure will continue

அந்த வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி, கொடைக்கானலுக்கு வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ooty epass registration 2024 online

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் – ஆணையம் ஒப்புதல் !

அத்துடன் உள்ளூரில் வசிக்கும் பொது மக்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *