நிபா வைரஸ் பரவல். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் மருந்து. மீண்டும் லாக்டவுன். நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் கோழிக்கூடு மாவட்டத்தில் ஒன்பது பஞ்சாயத்துகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய இருக்கின்றது.
வைரஸின் பெயர் காரணம் :
1998ம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் குட்டி கிராமத்தில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 300 பேர்களில் 100 பேர்கள் இறந்துள்ளனர். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு அதிகமாக இருக்கின்றது. நோய் பாதித்த கிராமம் பெயர் தான் நிபா. எனவே இந்நோய்க்கு நிபா வைரஸ் என்று தற்போது வரையில் சொல்லப்படுகின்றது.
எப்படி பரவியது :
நிபா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பன்றிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். காடுகளில் வௌவால்கள் இருப்பது சாதாரணம் தான். ஆனால் வௌவால் சாப்பிட்டு கீழே போட்ட பழங்களை பன்றிகள் சாப்பிடும் போது பன்றிகளுக்கு ஒரு வித நோய் தொற்றுகின்றது. மனிதர்கள் பன்றியுடன் வாழ்ந்து வந்ததால் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகின்றது.
இந்தியாவில் நிபா வைரஸ் :
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 2018ம் ஆண்டு முதன் முதலில் நிபா வைரஸ் மனிதர்களிடம் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 28 பேர்களுக்கு நோய் தாக்கப்பட்டு 17 நபர்கள் வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். கேரளாவிலும் நிபா வைரஸ் தாக்கியவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தான் இருந்தது. அப்போது மருத்துவர்கள் , மக்கள்கள் ஒன்றிணைந்து நிபா வைரஸ் மக்களிடம் பரவுவதை தடுத்தனர். 2021ம் ஆண்டுகளில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குளே இருந்தது.
2023 நிபா தாக்கம் :
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் மனிதர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 6 பேர்கள் வரையில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் பாதித்தவர்களில் இருவர் இறந்துள்ளார். நோய் பாதித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி தருகின்றது. இந்நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்க்கு பரவியுள்ளது.
பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !
2023 வைரஸ் பாதித்த முதல் நபர் :
கேரளாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருவர் சில உடல் உபாதைகளின் காரணமாக மருத்துவமனை செல்கின்றனர். மருத்துவர் நோயாளியிடம் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதே போல் நோய் பாதிப்பு இருந்துள்ளதா அல்லது யாரேனும் இறந்திருக்கின்றார்களா என்று கேட்டதற்கு கடந்த மாதம் குடும்பத்தில் ஒருவர் இறந்தார் என்று கூறியுள்ளார். நோயாளியை விசாரித்த மருத்துவர் அதிர்ந்து விடுகின்றார். காரணம் இவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரியை எடுத்து புனே வைராலஜி நிறுவனத்திடம் சோதனைக்கு அனுப்பி இருக்கின்றார். சோதனையின் இறுதியில் இவருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருக்கின்றது என்று உறுதியாகி விடுகின்றது.
நிபா பரவியது எப்படி :
கடந்த மாதம் இறுதியில் இறந்தவரும் தற்போது நோய் பாதிக்கப்பட்டவருக்கு சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சந்தித்து பேசி இருக்கின்றனர். இறந்தவருக்கு நிபா வைரஸ் தாக்கி இருப்பது பின்னரே கண்டறியப்பட்டு இருக்கின்றது. எனவே இறந்தவரிடம் இருந்து இவருக்கும் பாதிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் என்பதால் கேரளா மாநில மருத்துவர்கள் இந்நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
நோய் அறிகுறிகள் :
1. அதிக காய்ச்சல்
2. உடல் வலி
3. பயங்கர தலை வலி
4. வாந்தி வருவது போல் உணர்வு
5. முகத்தில் சதை பிடிப்பு
6. அடிக்கடி மயக்கம் போன்றவைகள் நிபா வைரஸின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
நிபா வைரஸின் கொடுமைகள் :
ஒரு காலத்தில் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திய பின் தன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கேரளா மாநிலங்களில் பரவி வரும் நிபா வைரஸுக்கு அதிகாரப்பூர்வமான தடுப்பு மருந்துகள் கிடையாது. மழை காலங்களில் பரவும் நோயாக இருந்தாலும் நோய் பதித்த பலர் இறந்து விடுகின்றனர்.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
அரசு எடுக்கும் நடைமுறைகள் :
1. கேரளா மாநிலத்தில் கட்டாயம் மாஸ்க் போட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.
2. 9 பஞ்சாயத்துகளில் முழுமையாக லாக்டவுன் போடப்பட்டு இருக்கின்றது.
3. லாக்டவுன் பகுதிக்குள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
4 பள்ளிகள் , கல்லூரிகள் , அலுவலகம் எல்லாம் லாக்டவுன் பகுதிக்குள் மூடப்பட்டு இருக்கின்றது.
5. காலை 5 – 7 மணி வரையில் அருகில் இருக்கும் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும். ஆனால் தீயணைப்பு மற்றும் மருத்துவமனைகள் , மெடிக்கல் மட்டுமே 24 மணி நேரமும் செயல்படும்.
அரசு வழங்கும் அறிவுரைகள் :
1. வீடுகளை சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
2. மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்
3. வௌவால்கள் இருக்கும் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம்.
எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம் :
மூன்று முறைகள் இம்மாநிலம் நிபா வைரஸை எதிர்த்து போரிட்டாலும் இறப்பு விகிதங்களை குறைக்க முடியவில்லை. கேரளா மாநிலத்துடன் கர்நாடக மற்றும் தமிழக எல்லைகள் இருப்பதால் எல்லைகளில் பயணிக்கும் நபர்களிடம் தீவிர கண்காணிப்பு சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று கேரளாவில் இருந்து கன்னியாகுமரி எல்லையில் நடந்த சோதனையில் 5 பேர்களுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மீண்டும் கேரளாவிற்கு திருப்பி விடப்பட்டு உள்ளனர். 1000 பேர்கள் வரையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி :
நிபா வைரஸ் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. ஆனால் இந்நோய்க்கு என்று தடுப்பு மருந்துகள் கிடையாது. வெளிநாடுகளில் இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு ” மோனோகுளோனல் ஆன்டிபாடி ” என்னும் மருந்து கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் நோய் பதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 2018ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கிய மருந்துகளில் தற்போது 10 பேருக்கு மட்டுமே வழங்கும் படியாகவே கேரளாவில் இருப்பு இருக்கின்றது. இதனால் இம்மருந்தில் 20 டோஸ் இறக்குமதி செய்யப்பட இருக்கின்றது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1 டெபாசிட் உங்களுக்கு வந்துருக்கா ? உடனே செக் பண்ணுங்க !
மருந்து எப்படி சாப்பிட வேண்டும் :
நோய் தாக்குதலின் ஆரம்ப காலங்களில் இந்த தடுப்பு மருந்தினை சாப்பிட வேண்டும். இம்மருந்து கேரளா அரசு மற்றும் குடும்பத்தினரின் விருப்பங்களின் அடிப்படையில் ” கருணை ” முறையிலேயே நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
கேரளாவில் நிபா தமிழ்நாட்டில் டெங்கு :
கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை போல் தமிழ்நாட்டில் டெங்கு வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. தினமும் 2 முதல் 3 பேர்கள் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 22 பேர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் பாதிப்புகள் தற்போது அதிகரித்து வந்தாலும் நாம் சுகாதாரத்துடனும் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றும் போது நோய் தாக்கத்தில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம்.