நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு? – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியராக இருந்து வந்தவர் தான் நிர்மலா தேவி. அவர் பணிபுரிந்த கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு?
அதுமட்டுமின்றி அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று ஸ்ரீ வில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
ஹார்லிக்ஸ் – ஹெல்த் ட்ரிங்ஸ் கிடையாது – மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
மேலும் இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று நடந்த விசாரணையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதாவது நிர்மலா தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பகவதியம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை வருகிற 29 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!