நிர்மலா தேவி வழக்கில் புதிய திருப்பம்: கடந்த 2018 ஆண்டு உலகத்தையே தூக்கி வாரி போட்ட வழக்கு என்றால் அது பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு தான். அவர் வேலை பார்த்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரை காவல்துறை கைது செய்தது. அதுமட்டுமின்றி காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அந்த மனுவில், ” தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், இந்த தவறை விடுதலை செய்த முருகன், கருப்பசாமிக்காக தான் செய்தேன் என்று கூறி பரபரப்பு மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் இதில் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜூன் 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.