நாளை காலை 4 30 மணிக்கு நித்தியானந்தா Live ல் வருவதாக அறிவிப்பு! இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில்,, நித்தி X தளத்தில் பதிவு!!!
கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற இந்துக்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
கைலாசா:
இதனை தொடர்ந்து ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார் நித்யானந்தா. அதே சமயம் யூடியூப் மூலம் நேரலையில் பிரசங்கம் செய்து வந்த நிதயானந்தா இறந்து விட்டததாகவும், இந்து மதத்திற்காக உயிர்த்தியாகம் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
Live ல் வரும் நித்தியானந்தா:
அந்த வகையில் நித்தியானந்தா இறந்து விட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் விளக்கம் கொடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தனது ஜிப்லி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நித்தியானந்தா.