Home » சினிமா » ஆல் ஏரியாவிலும் அம்மா கிங்டா? நடிப்பை தாண்டி அந்த விளையாட்டில் கலக்கிய நிவேதா பெத்துராஜ்- ரசிகர்கள் வாழ்த்து!!

ஆல் ஏரியாவிலும் அம்மா கிங்டா? நடிப்பை தாண்டி அந்த விளையாட்டில் கலக்கிய நிவேதா பெத்துராஜ்- ரசிகர்கள் வாழ்த்து!!

ஆல் ஏரியாவிலும் அம்மா கிங்டா? நடிப்பை தாண்டி அந்த விளையாட்டில் கலக்கிய நிவேதா பெத்துராஜ்- ரசிகர்கள் வாழ்த்து!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் நடித்த ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மதுரை சேர்ந்த தமிழ் நடிகை என்ற போதிலும் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது ஒரு விளையாட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது சமீபத்தில் டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பாக பங்கேற்று இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கலக்கியுள்ளார். மேலும் இவர் கடந்த 2015ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வெற்றியை அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மருத்துவமனையில் மேக்ஸ்வெல் திடீர் அனுமதி.., இரவு பார்ட்டியில் என்ன நடந்தது? கிரிக்கெட் வாரியம் விசாரணை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top