Home » சினிமா » மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை –  நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை –  நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை -  நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை –  நிவேதா தாமஸ்: குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கெரியரை ஸ்டார்ட் செய்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பது தொடர்ந்து திரையுலகில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எத்தனையோ பேரை நாம் சொல்லலாம்.

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை –  நிவேதா தாமஸ்

அதில் ஒருவர் தான் நடிகை நிவேதா தாமஸ். அவர் தொலைக்காட்சியில் சிவமயம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, தேன் மொழியாள் உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருந்தார். இதையடுத்து நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார், பாபநாசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழ் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீட்டு இருந்தது. அது பல பேர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த வகையில் தற்போது இது குறித்து நிவேதா தாமஸ் ஓப்பனாக பேசியுள்ளார்.

Also Read: விஜய்யின் “தி கோட்” படத்தில் இளையராஜா பாடல் – எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரேம்ஜி!!

அதில் அவர் கூறியதாவது, ” ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் கவலையை அளிக்கிறது. பெண்கள் அமைப்பால் தான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

எந்த துறையில் பெண்கள் வேலை பார்த்தாலும் அவர்களின் பாதுகாப்புக்கு அவசியம் முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டில் இருப்பதை விட பெண்கள் அதிக நேரம் பணியிடங்களில் தான் செலவழிக்கிறோம்.

ஹேமா கமிட்டி போல் மற்ற சினிமா துறையிலும் வந்தால் நல்லது என்று கூறியுள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top