உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லைஉணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை

உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடையில்லை. பால், பால் சார்ந்த உணவு பொருட்கள் , பிஸ்கட் எண்ணெய் போன்ற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக்ஸ் பொருட்கள் பயன்படுத்த தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பால், பால் சார்ந்த உணவு பொருட்கள் , பிஸ்கட் எண்ணெய் , அரிசி, பருப்பு, மருந்து பொருட்கள் போன்ற உணவு பொருட்களுக்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த அரசாணை போடப்பட்டது. இது சாத்தியமற்றதாக இந்த அரசாணையை எதிர்த்து சிறு , நடுத்தர வியாபாரிகள் எதிர்த்தனர்.இதனால் சிறு, குறு வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதனால் இந்த பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்குமாறு மனு தாக்கல் செய்தனர் . இதனால் இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் கடந்த 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருந்தார்.

JOIN WHATSAPP CHANNEL

இந்த வழக்கானது தற்சமயம் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அவர்கள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. எந்த வித ஆய்வும் மேற்கொள்ளாமல் தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாகவும், அரசாணையை மாற்றி அமைக்கவும் வக்கீல் வாதிட்டார். அதை விசாரித்த நீதிபதிகள் இந்த உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பயன்படுத்த தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

By Revathy