இந்தியாவில் இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது. நமது நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைபடை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்க படஉள்ளனர். பிற துணை ராணுவ படையினர் அந்த பொறுப்பில் சேர உள்ளனர்.
இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது
இசட் ப்ளஸ் பாதுகாப்பு:
தேசிய பாதுகாப்பு குழு (என்.எஸ்.ஜி), ஆனது கடந்த 1984 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் கமாண்டோக்கள் விமான கடத்தல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அதன் கருப்பு பூனை படை கமாண்டோக்கள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் இந்தியாவில் 9 முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர் மாயாவதி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, மத்திய கப்பல் துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங், முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பூனை படை பாதுகாப்பில் உள்ளனர்.
இது போல் இந்திய-திபெத்திய எல்லை போலீஸ் என்ற துணை ராணுவ படையினர் இந்தியாவின் முக்கிய 200 கும் மேற்பட்ட பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு – WHO வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!
மறுஆய்வில் கருப்பு பூனை படை:
முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து கருப்பு பூனை படை முழுமையாக விடுவிக்க பட வேண்டும் என்ற யோசனை 2012 ம் ஆண்டில் இருந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் நாட்டில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலின் போது கருப்பு பூனை படை கமாண்டோக்கள் தேவை படுவார்கள்.இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பது தேவையற்ற சுமையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. 3 வது முறையாக மோடி அரசு பதவியேற்றுள்ள நிலையில் இது குறித்த மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடுவிப்பு:
இதன் மூலம், கருப்பு பூனை படை மற்றும் இந்திய- திபெத்திய போலீஸ் ஆகிய சுமார் 450 கமாண்டோக்களை முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கபடுவார்கள்.அவர்கள் அயோத்தி ராமர் கோவில், தென்மாநிலங்களின் முக்கிய பகுதிகளை பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அப்படைகளின் பாதுகாப்பில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள், மத்திய ரிசெர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறுவார்கள்.
சாரைப்பாம்பை கொன்று சமையல் செய்த இளைஞர்
ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர்
தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன்