தற்போது அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிஹான் ஹிடாங்கியோவுக்கு தற்போது 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமைதிக்கான நோபல் பரிசு :
நாகசாகி மற்றும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு தற்போது 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நோபல் கமிட்டி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Nobel Peace Prize 2024 Announcement – Japanese organisation Nihon Hidankyo
அணு ஆயுதம் ஒழிப்பு :
நிஹான் ஹிடாங்கியோ அமைப்பானது அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்குவதற்கு அயராத முயற்சிகளுக்காகவும் மற்றும் அதன் சக்திவாய்ந்த சாட்சியங்களுக்காகவும் நிஹான் ஹிடாங்கியோ அமைப்பு கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பணக்காரர்களின் சொத்துமதிப்பு 40% உயர்வு – வெளியான ரிப்போர்ட் !
அந்த வகையில் 1956 இல் நிறுவப்பட்ட நிஹான் ஹிடாங்கியோ, ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அணுகுண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களால் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த அமைப்பிற்கு தற்போது அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.