நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி - ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி - ஜூன் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டிற்க்கு வரும் என சென்னை மாநகராட்சி தகவல் !

நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீன் அங்காடி வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கடையும் சுமார் 6.5 அடி நீளமும் 4.9 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை வெட்டி சுத்தம் செய்வதற்கு தனித் தனியாக இடங்கள் உள்ளன. மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி, கழிவுகளை சுத்திகரிப்பதற்கான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி… விண்ணப்பிப்பது எப்படி? 

இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜூன் இரண்டவது வாரத்தில் மீன் அங்காடி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன் பிடி தடை காலம் முடிந்த பின்னர் இங்கு மீன் விற்பனை தொடங்க உள்ளது. ஆனால் இங்கு மீன் விற்பனை செய்ய மாட்டோம் என அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *