டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம் - வெளியான அறிவிப்பு !டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம் - வெளியான அறிவிப்பு !

தற்போது ரத்தன் டாடா மறைவிற்கு பிறகு டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் மும்பை பிரீச்கேண்டி தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை மோசமான தால் கடந்த கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து ரத்தன் டாடா மறைவிற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, 21 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக பதவி வகித்தவர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா தற்போது உயிரிழந்ததை தொடர்ந்து, டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு 2024 அறிவிப்பு – யாருக்கு தெரியுமா ?

ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ள வில்லை என்பதால் அவரது சகோதரர் நோயல் தற்போது தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நோயல் டாடா சர் ரத்தன் டாடா, டோரப்ஜி அறக்கட்டளைகளின் அறங்காவலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *