ஆபாசமாக டான்ஸ் ஆடிய பெண்கள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இளம் பெண்கள் செய்த காரியம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது நொய்டா பகுதியில் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் ஓட்ட அவருக்கு பின்னால் இரண்டு இளம் பெண்கள் எதிரெதிரே அமர்ந்து கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை செய்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதை வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள், சாலையில் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டதற்காகவும், ஆபத்தான ரெய்டில் ஈடுபட்டதாலும் அந்த இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீஸ் ரூ.33,000 அபராதம் விதித்துள்ளனர். ஆனால், சம்மந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.