இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான்: பொதுவாக பெண்கள் தங்களின் அழகை சரியாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.அதனால் அவர்கள் அணியும் ஆடையில் இருந்து உதட்டுக்கு போடும் லிப்ஸ்டிக் வரைக்கும் மற்றவர்களை கவரும் விதமாகவே அலங்கரிப்பார்கள். இந்நிலையில் வடகொரியாவில் வாழும் பொதுமக்களுக்கு வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சி தலைமை ஏற்றதில் இருந்து கடுமையான சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் அங்கு வாழும் மக்கள் அழகுசாதனப் பிராண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது அந்நாட்டு அரசு மீண்டும் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது வடகொரியாவில் வாழும் மக்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் தொடர்பு இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிய கூடாது. அதே போல் உடலில் கம்மல் போன்ற அணிகலன்களும் அணிய கூடாது. குறிப்பாக  பெண்கள் நீளமான கூந்தல் வைத்திருக்க கூடாது என பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

குக் வித் கோமாளி 5வில் கோமாளியாக கலக்கும் வைஷாலி ஸ்போர்ட்ஸ் பிளேயரா? அவர் யார் தெரியுமா?

இனி பெண்கள் ரெட் லிப்ஸ்டிக் & ஜீன்ஸ் போட்டால் தண்டனை தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *