வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் - தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம் - தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம்: வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 4,000 வீடுகள், நிலங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. இதில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வட கொரியாவில் வெள்ளத்தால் கடும் சேதம்

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் பார்வையிட்டார். இந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என தெரிவித்தார்.

மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற போராடிய மீட்பு பணி அதிகாரிகளை பாராட்டினார். அதுமட்டுமின்றி அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Also Read: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டபடி வெள்ளத்தின் போது சரியாக வேலை பார்க்காத அதிகாரிகள் மற்றும் கடமை தவறிய மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட  30 பேருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென் கொரியாவின் “Chosun TV” என்ற செய்தி வெளியான நிலையில், தற்போது வரை வடகொரியா தரப்பிலிருந்து எந்த ஒரு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *