நத்திங் போன் 2a புது எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம் - இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?நத்திங் போன் 2a புது எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம் - இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?

நத்திங் போன் 2a புது எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம்: நத்திங் நிறுவனம் இந்திய உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் தங்களது மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில்  நத்திங் போன் 2a மாடல் பிளாக் மற்றும் ஒயிட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் புதிதாக blue நிற வேரியண்ட் மொபைல் போனை அறிமுகமாகி இருக்கிறது. மேலும் இந்த புதிய மொபைலில் நிறம் மட்டுமே மாறியுள்ளது. இதை தவிர  டிசைன் மற்றும் அம்சங்களில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை.

நத்திங் போன் 2a புளூ எடிஷன் இந்தியாவில் மே 2 முதல் அறிமுகம்

அதுமட்டுமின்றி இதை இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த மொபைல் வருகிற மே 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் போன் 2a விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலையில் எந்தவித  மாற்றமும் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி “ஜீரோ ஹவர்” சிறப்பு விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் சி.எம்.எஃப். ஆடியோ சாதனங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு என்று கூறப்படுகிறது.

குஜராத்தில்  173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் – இரண்டு பேர் அதிரடி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *