யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ். பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ்
அந்த வகையில் இனி வாசன் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து டிடிஎஃப் வாசன் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் :
சென்னை அரும்பாகத்தில் உள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடைக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை யூடியூபர் டிடிஎஃப் வாசனின் கடையில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் – குடிநீர் வாரியம் அறிவிப்பு !
மேலும் டிடிஎஃப் வாசனின் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினர்.