டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க - முழு விவரம் உள்ளே!டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க - முழு விவரம் உள்ளே!

டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைலில் தான் பெரும்பாலான மக்கள் பணத்தை பரிமாறி வருகின்றன. குறிப்பாக பொட்டி கடையில் தொடங்கி  மால்கள் வரை நாம் வாங்கும் பொருட்களுக்கு UPI முறையில் தான் பணம் செலுத்துகிறோம். மேலும் UPI பரிவர்த்தனைகளுக்கு UPI PIN என்பது மிகவும் அவசியம். இப்படி இருக்கையில் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை எளிதாக உருவாக்கலாம். அது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க – முழு விவரம் உள்ளே!

UPI பின்னை உருவாக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

  1. டெபிட் கார்டைப் பயன்படுத்துதல்
  2. ஆதார் OTP ஐப் பயன்படுத்துதல்

டெபிட் கார்டு இல்லாமல் UPI பின் அமைப்பது எப்படி?

உங்கள் ஆதார் நம்பரை பயன்படுத்தி UPI பின்னை அமைக்க, கீழே கொடுக்கப்பட்ட எளிய வழிமுறைகளை பின்பற்றி கொள்ளலாம்.

  1. உங்கள் UPI பயன்பாட்டைத் தொடங்கி, உங்கள் “BANK ACCOUNT NUMBER” விவரங்களை உள்ளிடவும்.
  2. இதனை தொடர்ந்து UPI பின் ஆப்ஷனை தேர்வு செய்து UPI பின்னை அமைப்பதற்கான விருப்பத்தைத் கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பின்னர் ‘ஆதார்’ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய ஒப்புதல் வழங்க வேண்டும்.
  4. அதில் உங்களுடைய ஆதார் எண்ணின் முதல் ஆறு எண்களை உள்ளிடவும்.
  5. இதனை தொடர்ந்து உங்களுடைய ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதை உள்ளிடவும்.
  6. அதன்பின்னர் திரையில் புதிய UPI பின் உருவாக்கும் ஆப்சன் காட்டும்.
  7. பின் நம்பரை கொடுத்த பின்னர்  OTP மற்றும் உங்கள் UPI பின்னை மீண்டும் உள்ளிடவும்.

உ பி அரசு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து – 10 குழந்தைகள் பலி – என்ன நடந்தது?

மேற்கண்ட முறைகளை பின்பற்றியதன் மூலமாக டெபிட் கார்டு தேவையில்லாமல் UPI பின்னை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *