தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023

 தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2023

  இம்மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம். 

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ( National Research Center For Banana – NRCB )ல் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  இளநிலை ஆராய்ச்சியாளர் ( Junior Research Fellow ) பணியிடங்கள் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கின்றது. 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  ஒரு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் திருச்சி NRCBல் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :

  அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகங்களில் தோட்டக்கலை , விவசாயம் , தாவர இனப்பெருக்கம் , மரபியல் , உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் ( M.Sc ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். 

திருவள்ளூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2023 !

வயதுத்தகுதி :

  35 வயதிற்குள் இருக்கும் ஆண்களும் 40 வயதிற்குள் இருக்கும் பெண்களும் NRCBல் காலியாக இருக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

  ரூ. 31,000 முதல் ரூ.35,000 வரையில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

அனுபவம் :

  வாழை திசு , வளர்ப்பு , பிறழ்வு , மூலக்கூறு மற்றும் உயிரியல் நுட்பங்கள் போன்றவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  31.10.2022ம் தேதிக்குள் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  NRCB காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

மின்னஞ்சல் முகவரி :

  nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தொலைபேசி எண் : 0431 – 2618125

விண்ணப்பக்கட்டணம் :

  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  நேர்காணல் மூலம் தகுதியான இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *