தமிழகத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் வைத்து இன்று(31.12.2024) நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற சமூக அவலத்தை பற்றி தான். மாணவி கொடுத்த புகார் பேரில், பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் கூடிய FIR வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?
மேலும் இந்த தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று கூட, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசினார். அந்த வகையில் இன்று(31.12.2024) நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த சீமான் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?
இருந்தாலும், இன்று காலை முதல் வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். அதுமட்டுமின்றி, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சீமான் காரில் இருந்து இறங்கிய அடுத்த நிமிடமே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டார். இதனால் போலீசாருக்கும் நாதகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!
PSLV – C60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் – இஸ்ரோ அறிவிப்பு!
அரசு பேருந்தில் POLICE இலவசமாக பயணிக்கலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!
2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!