நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு 2024: தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் புதுச்சேரி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதுவரை பிளஸ் 2 மதிப்பெண்களை வைத்து தான் கல்லூரியில் சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வு மூலமாக தான் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட இருக்கின்றனர் என்று சுகாதாரத்துறை முன்னரே அறிவித்து இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் வருகிற ஜூன் 10ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற ஆன்லைன் வெப்சைட் மூலமாக விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 25 என்றும், விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு வயது 17 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணமான பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்க கட்டணமாக ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லிம் பிரிவினருக்கு 200 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி உள்ளிட்டோர் விண்ணப்பிக்க 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நுழைவு தேர்வு அடுத்த மாதம் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu government college – nursing course college
TNPSC தேர்வுகள் 2024.., தமிழ் தெரியாதா? அப்ப அரசு வேலை கிடையாது? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட்
நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் !
இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி ஓய்வு
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (07.06.2024) !