Home » செய்திகள் » சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் காலை உணவு திட்டம். ஏற்கனவே மதியஉணவு திட்டம் இருந்து வரும் நிலையில் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை தந்தது.

இதற்காக சத்துணவு மையங்கள் இயங்கி வருகிறது. அதன்படி சத்துணவு அமைப்பாளர் அதனை கவனித்து வருகிறார்கள். மேலும், சத்துணவு அமைப்பாளர் ஒரு வாரத்திற்கு மேல் கூடுதலாக பணிபுரிந்தால் மட்டும் அவர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும். இப்படி ஒரு மாதம் முழுவதுமாக கூடுதல் பணிபுரிந்து இருந்தால், அவர்களுக்கு கூடுதல் பொறுப்புப் படியாக ரூ.1.000 வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு தினசரி ரூ.20 வீதம், மாதத்திற்கு ரூ.600 ஆக பொறுப்புப் படி வழங்கபட்டு வருகிறது. அதனை தற்போது ஒரு நாளுக்கு ரூ.33 வீதம் என உயர்த்தி பொறுப்புப் படி ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் அரசுக்கு வருடத்திற்கு தோராயமாக கூடுதல் ரூ.6,68,11,200 செலவு ஏற்படும் என்று ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. இது குறித்து இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?  

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top