சம்பள உயர்வு
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதை தொடர்ந்து தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியது. அந்த வகையில் இப்பொழுது ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அம்மாநிலத்தின் முதல்வர் பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஒடிசா மாநிலத்தில் கிட்டத்தட்ட 12, 784 ஜூனியர் ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஜூனியர் ஆசிரியர்களுக்கு இதுவரை சம்பளம் மாதம் 13, 800 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் பட்நாயக் தெரிவித்துள்ளார்.