ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்?  

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது பொய்? -கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது நிற்க வைக்கப்பட்ட சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் இந்த விபத்துக்கு காரணம் ரயிலை இயக்கி பைலட் தான் என்றும், அவர் வண்டியை இயக்கி கொண்டிருக்கும் பொழுது செல்போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வந்ததால் தான் இந்த விபத்து நேர்ந்தது என்று தெற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

குடும்ப கட்டுப்பாடு செய்த இளம்பெண் மரணம் – கணவர் கொடுத்த பரபரப்பு புகார்!

இதனை தொடர்ந்து பைலட் மற்றும் ஓட்டுநர்கள் மொபைல் போனின் சிக்னல்களை ஆய்வு செய்து பார்த்ததில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய தகவல் பொய் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் இரு லோகோ பைலட்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி  எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து அரங்கேறி இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Leave a Comment