
ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக. ஒடிஷா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 5 முறை முதல்வராக பதவி வகித்த நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தற்போது ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக :
ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக 80 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதுள்ள தகவலின் படி ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 49 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை – பரபரப்பாகும் அரசியல் களம் !
அந்த வகையில் ஆட்சியமைக்க மொத்தம் 74 இடங்கள் தேவை. இந்நிலையில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட பாஜக முன்னிலையில் இருப்பதால் முதல்முறையாக ஒடிஷா பாஜக ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.