ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள் – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… இப்போது எப்படி உள்ளார்?

Breaking News: ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள்: ஒடிசா மாநிலத்தில் தற்போது கோரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது ஒடிசாவின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா பெஹாரா (19) என்பவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இதனால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு நேற்று தலையில் அதிகமான வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்த போது தலையில் ஊசிகள் இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை எடுத்தனர். 2 முறை ஆபரேஷன் நடைபெற்றதில் அவரது  தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகளை மருத்துவர் எடுத்தனர். women hospital

Also Read: இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை –  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!

அதுமட்டுமின்றி அதிர்ஷ்டவசமாக அந்த ஊசிகள் எதுவும் அவரின் தலைப்பகுதியில் உள்ள எலும்பு பகுதியில் எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அதற்கு மாறாக தசை பகுதியில் அவருக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை சிறப்பாக முடிந்த நிலையில் ரேஷ்மா நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. odisha news

Leave a Comment