Home » செய்திகள் » தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

OLA நிறுவனம் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் விதமாக தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்க வாகனம்:

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பைக் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் ஏகப்பட்ட பைக் நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது அம்சங்களுடன் கூடிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்  ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Pure 24-காரட் தங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ‘ஓலா S1 ப்ரோ சோனா’ வாகனம் வெள்ளை மற்றும் தங்க முலாம் பூசப்பட்டு ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும் அதில் சில பாகங்கள் 24-காரட் தங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பிராண்டின் வழக்கமான மாடல்களைப் போல் Ola S1 Pro Sona வேரியண்ட் விற்பனைக்கு வராது. அப்போது எப்படி வாங்க முடியும் என்றால், ஓலா நிறுவனம் நடத்தும் #OlaSonaContest போட்டியில், கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு தான் இந்த பைக் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இப்படி இருக்கையில் இந்த போட்டியில் எப்படி கலந்து கொள்வது குறித்து உங்களுக்கு கேள்வி எழும்பும். அதை இங்கு பார்க்கலாம். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், Ola S1 உடன் ஒரு ரீல்ஸ் செய்தோ அல்லது பிராண்டின் ஸ்டோருக்கு வெளியே Ola S1 உடன் செல்ஃபியைக் கிளிக் செய்து வலைத்தளங்களில் @olaelectric, #SavingsWalaScooter மற்றும் #OlaSonaContest உள்ளிட்ட டேக் உடன் நீங்கள் ஏன் Ola Sona-க்கு தகுதியானவர் என்பதை பதிவிட வேண்டும். அப்போது தான் நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம்  – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?

அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.12.2024)! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top