மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பல ஆண்டுகளாக இந்தியன் வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் ரூ. 17 லட்சம் தவறுதலாக அனுப்பப்பட்டு மீண்டும் வங்கி பணத்தை பெற்றுக்கொண்டது. இந்தியன் வங்கியின் அலட்சியம் காரணமாக பணம் தவறுதலாக அனுப்பப்பட்டு உள்ளது.
மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் !
இந்தியன் வங்கி கவனக்குறைவு :
மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். காஞ்சிபுரத்தினை சேர்ந்த பண்டிதவி ஜெயலக்ஷுமி என்னும் மூதாட்டி இந்தியன் வங்கியில் பல ஆண்டுகளாய் கணக்கு வைத்துள்ளார். திடீரென்று இவரின் வங்கி கணக்கிற்கு ரூ.17 லட்சம் வந்துள்ளது. இதனை கண்ட மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பணம் பற்றி விசாரணை செய்வதற்காக மூதாட்டி வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் இருக்கும் அதிகாரிகளிடம் பணம் பற்றி கூறி இருக்கின்றார். அப்போது வங்கி அதிகாரிகள் கூறியதாவது , ரூ. 17 லட்சம் தவறுதலாக உங்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளனர்.
JOIN SKSPREAD WHATSAPP | CLICK HERE |
ஏமாற்றத்தில் மூதாட்டி :
ஆரம்பத்தில் மூதாட்டியின் வங்கி கணக்கு எண்ணிற்கு வந்த ரூ. 17 லட்சம் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி வங்கி அதிகாரிகள் பணத்தினை எடுத்து விட்டனர். இதனால் ஜெயலட்சுமி என்னும் மூதாட்டி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
TMB வங்கியின் அலட்சியம் :
இதே போலத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அதிகாரிகளின் அலட்சியம் நடந்தது. சென்னையை சேர்ந்த டிரைவர் வங்கி கணக்கு எண்ணிற்கு ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் தவறுதலாக வந்து விட்டது. திடீரென்று இவ்வளவு பணம் வந்துள்ளது என்று அறிந்த டிரைவர் வங்கியை அணுகிய போது தவறுதலாக வந்து விட்டது என்று கூறி வங்கி பணத்தினை பெற்றுக்கொண்டது.
வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !
கடந்த 9 நாட்களுக்கு முன் தான் TMB வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவினால் 9 ஆயிரம் கோடி மாற்றி அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று இந்தியன் வங்கியின் கவனக்குறைவினால் ரூ. 17 லட்சம் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது. இதனால் வங்கியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.