நாளை நடைபெற உள்ள மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளார். அத்துடன் எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள்
JOIN WHATASAPP TO GET DAILY NEWS
மக்களவை தேர்தல் :
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மக்களவையில் அதிகாரமிக்க பதவியான சபாநாயகர் பதவிகான தேர்தல் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓம் பிர்லா வேட்புமனுத்தாக்கள் :
மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மீண்டும் ஓம் பிர்லாவை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி :
இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிக்கு வழங்கினால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோரிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.