ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா - வெளியான முழு தகவல் இதோ !ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா - வெளியான முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார் உமர் அப்துல்லா என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அங்கு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அத்துடன் பாஜக மற்றும் மெஹபூபா முப்தி கட்சி தனித்தனியே போட்டியிட்டன. Omar Abdullah becomes Chief Minister of Jammu and Kashmir Farooq Abdullah Announces

இதனை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை இன்று காலை வெளியான நேரத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியினர் 50 தொகுதிகளை கடந்து முன்னிலையில் உள்ளனர். அத்துடன் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகளின் எண்ணிக்கையை கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா 2 தொகுதிகளில் களம் கண்டு, தற்போது இரண்டிலும் முன்னிலையில் உள்ளார். அந்த வகையில் அவர் போட்டியிட்ட புட்காம், கந்தர்பால் தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார்.

மேலும் 2 தொகுதிகளிலும் அவர் முன்னிலையில் இருப்பதோடு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள அவரின் கட்சியும் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இதனையடுத்து இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *