omni bus fare hike: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு: பொதுவாக நம் நாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளை இயக்கி வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்க வரி கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் மாதம் உயர்த்தி வரும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இருக்கும் 67 சுங்கச்சாவடிகளில் 2 தவனையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
omni bus fare hike: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
அதன்படி நேற்று மதுரை, ஓமலூர், சமயபுரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்ற அபாயம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதாவது சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தையும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also Read: TNPSC குரூப் 2 & 2A தேர்வர்களே ரெடியாகுங்க – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுங்க வரி கட்டணம் உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை