வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திடீர் அறிவிப்பால் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு(ஏ.ஐ.டி.பி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது.இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பஸ்கள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயண சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.

இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகின்றன. எனவே A.I.D.B வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் புறப்படும் பகுதி மற்றும் செல்லும் இடம் பற்றிய விவரங்கள் இருக்கும் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும்.மோட்டார் வாகன துறை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்திற்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தை – மகளுக்கு மகாலட்சுமி பெயர் சூட்டிய இஸ்லாமிய தம்பதி!!

இவ்வாறு அனுமதி பெற்ற ஆம்னி பஸ்களுக்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால் 652 அனுமதி பெற்ற ஆம்னி பஸ்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டி.என்.என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு இயங்குகின்றன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன.

எனவே வருகிற 14 ந் தேதி முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கபட மாட்டாது.எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் இனி சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது.

Join WhatsApp Group

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு.அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை.ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்கவேண்டும்.

இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்

ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து –  49 பேர் உயிரிழப்பு

இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது

தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் –  இனி மாதம்  ரூ.1000 இல்ல ரூ.3000

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *