
ஒரே நாடு ஒரே தேர்தல், திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய தகவல்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் குறித்த முக்கிய அம்சங்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தேர்தல் பற்றிய முக்கிய அம்சங்கள் :
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமானதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை
இந்த தேர்தல் திட்டத்தை செயல்படுத்த 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் வேண்டும்.
மேலும் தொங்கு சட்ட சபை அல்லது ஆட்சி கவிழ்ந்தால் எஞ்சிய பதவி காலத்திற்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் அது தொடர்பான சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய கொள்ள வேண்டும்.
மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 100 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்திக்கொள்ளலாம்.
இது போன்ற அறிவிப்புகள் ஒரே நாடு ஒரே தேர்தல் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
சீமானை கூட்டணிக்கு அழைக்கும் கர்நாடக கட்சி ! எங்களோடு வந்தால் விவசாயி சின்னத்தை தருவோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைப்பு !
32 கட்சிகள் ஆதரவு மற்றும் 15 கட்சிகள் எதிர்ப்பு :
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி அறிக்கை தயாரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி அசாத் மற்றும் பல முக்கிய தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவானது பொதுமக்கள், அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துகளை கேட்டறிந்து, தற்போது அதனை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்ற காட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக இதனை வரவேற்றுள்ளது.
மாநில கட்சிகளான தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஏ.ஐ.எம்.ஐ.எம், சி.பி.ஐ, நாகா மக்கள் முன்னணி, ஏ.ஐ.யு.டி.எப் போன்ற காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அ.தி.மு.க, சிவசேனா, பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ஆர்), ஐக்கிய ஜனதா தளம், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிரோமணி அகாலி தளம் போன்ற காட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக உயர்மட்ட குழு தங்களின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.