தீபாவளி போனஸ் ராயல் என்ஃபீல்டு புல்லட். நீலகிரி மாவட்டத்தில் டீ எஸ்டேட் உரிமையாளர் தன் நிறுவனத்தில் பணி புரியும் 15 நபர்களுக்கு தீபாவளி போனஸ்ஸாக ஊழியர்கள் விரும்பிய புல்லட் வாகனங்களை பரிசாக வழங்கி இருக்கின்றார்.
தீபாவளி போனஸ் ராயல் என்ஃபீல்டு புல்லட் ! குஷியில் எஸ்டேட் ஊழியர்கள் !
தீபாவளி போனஸ் :
தீபாவளி வந்துவிட்டாலே நாம் ஒவ்வருவரும் எதிர்பார்ப்பது தீபாவளி போனஸ் தான். பணி செய்யும் ஒவ்வரு நபருக்கும் தங்களின் அலுவலகங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நோக்கில் போனஸ் வழங்குவது உண்டு. போனஸ் செயல்முறையானது தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
டீ எஸ்டேட் உரிமையாளர் செயல் :
சிவக்குமார் என்பவர் நீலகிரி மாவட்டத்தில் டீ எஸ்டேட் வைத்து நடத்தி வருகின்றார். மேலும் கோத்தகிரி மலையில் காய்கறிகளையும் சாகுபடி செய்தும் வருகின்றார். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் பணி செய்யும் ஒவ்வரு நபர்களுக்கும் ஒவ்வரு ஆண்டும் வித விதமான தீபாவளி போனஸ் பரிசாக வழங்கி வருகின்றார். அதன் படி இந்த ஆண்டு தீபாவளி போனசாக இவரின் நிறுவனத்தில் பணி செய்யும் 15 ஊழியர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் வாகனங்களை வழங்கி இருக்கின்றார்.
4 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை !
அதிர்ச்சியில் ஊழியர்கள் :
சிவகுமார் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் இவரின் கார் டிரைவர் என 15 பேர்களுக்கு புல்லட் வாகனங்களை போனசாக வழங்கி இருக்கின்றார். 15 நபர்களையும் அழைத்து வாகனத்தின் சாவியை கையில் கொடுத்து உள்ளார். சாவியை பெற்ற 15 நபர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த ஆண்டு தீபாவளி போனஸ் புல்லட் வாகனமாக இருப்பது ஊழியர்கள் மத்தியில் வரவேற்க்க தக்க ஒன்றாக உள்ளது.
தீபாவளி போனஸ் இந்தியாவில் ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கும் ஒரு செயல் தான். கடந்த ஆண்டு சென்னையில் நகை கடை உரிமையாளர் இவரின் ஊழியர்களுக்கு கார் , பைக் போன்ற பொருட்களை தீபாவளி போனசாக வழங்கினார். அதே போல் நீலகிரி மாவட்டத்தில் சிவக்குமார் தன் ஊழியர்களுக்கு புல்லட் வழங்கி இருப்பது ஆச்சரியத்தினை அளிக்கின்றது.