ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு: தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். அதிலும் மக்கள் அதிகமாக செல்ல ஆசைப்படுவது ஊட்டி தான். இந்நிலையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு
அதாவது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க அங்கு எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் முக்கியமான சுற்றுலா தலம் என்றால் அது தொட்டபெட்டா காட்சி முனை தான். இதனால் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் யாரும் தொட்டபெட்டா காட்சி முனையை பார்க்காமல் சொந்த ஊருக்கு திரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தொட்டபெட்டா சோதனை சாவடியில் பாஸ்ட்டேக் மின்னணு பரிவர்த்தனை முறை தமிழக வனத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சோதனை சாவடி மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. Ooty doddabetta peak view point
Also Read: தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க… வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
இதனால் தொட்டபெட்டா சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று(ஆகஸ்ட் 20) முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் ஊட்டி செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். thotta petta peak
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்