
Breaking News: உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 120 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் ஒன்று வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. பல ஆண்டுகளாக இந்த குதிரை பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், உலக முழுவதும் பிரசித்தி பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டது.
உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு
இந்நிலையில் இந்த குதிரை பந்தய மைதானம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1978 முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை கட்டாமல் இருந்து வந்த நிலையில், மொத்தமாக இதுவரை 822 கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்காமல் இருந்து வந்ததால், இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் போலீஸ் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
Also Read: மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் – இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதுமட்டுமின்றி ரேஸ் கோர்ஸ் மேலாளரிடம் நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தனர். மேலும் வருவாய் துறைக்கு சம்பந்தப்பட்ட எல்லா கட்டிடங்களிலும் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.