உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் - பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் - பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

உதகை மலர் கண்காட்சி 2024.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியம் கண்காட்சி, பழக்கண்காட்சி என ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இந்த ஆண்டுக்கான உதகை 126 வது மலர் கண்காட்சி வரும் மே 10 முதல் மே 20 ஆம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். அத்துடன் மலர் கண்காட்சியில் பார்வையிடுவதற்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் மே 20 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

மலர்கண்காட்சியில் சிறியவர்களுக்கு (6 – 12 வயது ) – ரூ.75

பெரியவர்களுக்கு கட்டணம் – ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு – முழு தகவல் இதோ !

மேலும் இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *