Home » செய்திகள் » ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? - முழு விவரம் இதோ!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி?: தற்போது கோடைகாலம் தொடங்கிய காரணத்தால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த படி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை (ஏப்ரல் 1) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

1st Step : TN ePass என்ற அதிகாரபூர்வ போர்ட்டலுக்கு சென்று, நீங்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தால் (இந்தியாவுக்கு வெளியில் இருந்து – Outside India) என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அல்லது நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா என்றால் (இந்தியாவுக்கு உள்ளே – Inside India) என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்

Step 2: இதனை தொடர்ந்து உங்கள் செல்போன் எண், கேப்ட்சா (Captcha) குறியீட்டை பதிவு செய்து ‘செண்ட் OTP’ ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வந்ததும், அதனை பதிவிட்டு எண்டர் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்

3rd Step : இதனையடுத்து நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை க்ளிக் செய்யவும். ஊட்டி என்றால் ஊட்டி (Ooty) ஆப்சனை க்ளிக் செய்யுங்கள் அல்லது கொடைக்கானல் என்றால் கொடைக்கானல் (Kodaikanal) ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்

Step 4: அதன் பிறகு TN ePASS Application போர்டலுக்குள் நுழைந்ததும், கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தனையும் சரிபார்த்து பதிவிட்ட பின்னர், சமர்ப்பிக்க (Submit) என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அடுத்ததாக, வழிகாட்டுதல் (Rules and Regulation) படித்த பிறகு கண்பர்ம் (Confirm) ஆப்சனை கிளிக் செய்த உடன் இ-பாஸ் கிடைத்துவிடும். இதனை பதிவிறக்கம் அல்லது ஸ்க்ரீன் ஷாட் (Screen Shot) செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் பெயர்

வாகன பதிவு எண்

உள் நுழையும் நாள்

வெளியேறும் நாள்

நாடு, மாநிலம், மாவட்டம்

முகவரி, அஞ்சல் குறியீடு

தங்கும் இடம்

வாகன வகை

வருகைக்கான காரணம்

பயணிகளின் எண்ணிக்கை

வாகன உற்பத்தி வருடம்

எரிபொருள் வகை

இ-பாஸ் விண்ணப்பிக்க: https://epass.tnega.org/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top