நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் - கொளுத்திப்போட்ட OPS !

நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆல் தொடக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இயக்கம் தான் அதிமுக. தற்போது இந்த இயக்கம் எடப்பாடி தலைமையிலான ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி பிளவுற்று இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் OPS க்கு எதிராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதராகவும் அமைத்ததால் அனைத்து சட்ட போராட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை தழுவினார்.

இந்த அடிப்படையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜேபி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு ! மத்திய மந்திரி சபை ஒப்புதல் ! 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை திட்டம் – முழு விவரம் இதோ


தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் கேட்டு விண்ணப்பிக்க உள்ளதாக குறிப்பிட்ட அவர், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் எனக் கூறினார். மேலும் பிஜேபி உடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் நாங்கள் தான் உண்மையான அதிமுக என
ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *