Home » செய்திகள் » சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

சகோதரர் விஜய்யோட சேர்ந்து பணியாற்ற தயார்.., தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ் மகன் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர், ” நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணியின் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய தேர்தலாக நிச்சயம் அமையும். ராமநாதபுரத்தில் கண்டிப்பாக என்னுடைய அப்பா ஓபிஎஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார். அது போல் தேனி நாடாளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார்.

இதை எழுதி வச்சுக்கோங்க என்றார். இதையடுத்து தற்போது புதிதாக அரசியலில் இறங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். சகோதரர் விஜய் மக்களுக்கு பல  தொண்டுகளை செய்து வருகிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஒரு பாதையை வகுத்து தந்தால் அவருடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். போடி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்று உறுதியாக கூறியுள்ளார்.

எளிமையாக நடந்த மறைந்த விவேக் மகள் திருமணம்.., அப்பா கனவை கல்யாணத்தில் நிறைவேற்றி நெகிழ்ச்சி!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top