
தேர்தலில் இருந்து விலகிய ஓபிஎஸ்
மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் களம் காண தங்களை முழு வீச்சில் தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றனர். மேலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக பன்னீர் செல்வம் கூறி நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். மேலும் தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

ஏனென்றால் கடந்த மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் வெற்றி பெற்றதால் அங்கு நிற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் தற்போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஓ பன்னீர் செல்வம் அணி மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லையாம். எந்த ஒரு நிபந்தனையும் இன்றி பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டத்தில் பேச இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தலில் இருந்து விலகுகிறார் என்று சரியான காரணம் தெரியவில்லை?. ஒரு சிலர் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் தான் விலகுகிறார் என்றும், பாஜக கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பும் இல்லாமல் தான் விலகுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.