தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் சமீப நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தான் பலத்த பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை எடுத்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளதை அடுத்து 6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று சுழன்று வருவதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். weather report news in tamil
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்