சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும்
வெளிமாநில பஸ்களுக்கு தடை:
கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பயணிப்பதை பயணிகள் தவிர்க்குமாறும் போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேலும் அந்த பேருந்துகள் தமிழகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து வெளிமாநில பதிவெண் கொண்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.
உச்சநீதி மன்றத்தில் வழக்கு:
இந்த அறிவிப்பை எதிர்த்து கே.ஆர்.சுரேஷ் குமார் என்பவர் வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் வக்கீல் சங்ராம் சிங் போன்ஸ்லே சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘வெளிமாநில ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!
இந்த மனுவை கோடை அமர்வு நீதிபதிகள் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் மகேஷ் சஹஸ்ரநாமன் ஆஜராகி வெளி மாநில பஸ்களின் இயக்க தடையால் ஆம்னி பஸ்களின் இயக்கம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோர்ட் தலையிட வேண்டும் என வாதிட்டார்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு:
வழக்கை விசாரித்த நீதிமன்றம் “வெளிமாநில ஆம்னி பஸ்களை தடுக்க கூடாது” என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க ஆகஸ்ட் 12 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.