பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம். SRM ஹோட்டலின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் சொந்தமான இடத்தை சுற்றுலாத்துறை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எஸ்ஆர்எம் குழுமத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள தயார் என்றும், திருச்சி SRM ஓட்டலில் கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் !
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் :
எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அமைச்சர் கே.என்.நேரு மகனை எதிர்த்து எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக இது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும்,
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – பதறிய பெற்றோர்கள்!!
கூட்டணிக்கு வரவில்லை என்பதால் விஜயகாந்த் மண்டபத்தை திமுக இடித்து பழிதீர்த்தது. அந்தவகையில் திமுக இன்னும் திருந்தவில்லை என்பது எஸ்ஆர்எம் ஹோட்டலை கைப்பற்றும் முயற்சி காட்டுகிறது என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.