FSSAI தற்போது “தண்ணீர் பாட்டில்” அடைக்கப்பட்ட குடிநீரை அதிக ஆபத்துள்ள உணவு வகை என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது.
தண்ணீர் பாட்டில்:
பொதுவாக பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து ரோடோறோம் இருக்கும் தள்ளுவண்டி கடைகள் வரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அனுமதி தேவையாகும். தெளிவாக சொல்ல போனால் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என்பதை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!
மேலும் உணவு பொருட்களின் தரத்திற்கேற்ப சான்றிதழ் வழங்கி வருகிறது. எனவே நீங்கள் செல்லும் ஹோட்டல்களில் FSSAI அளித்த சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை முதலில் கவனியுங்கள். இந்நிலையில் FSSAI அதிக ஆபத்துள்ள உணவு வகை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” FSSAI தற்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குடி நீரை ‘அதிக ஆபத்துள்ள உணவு வகை’ என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது.
மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புக்கு, இந்திய தரநிலைப் பணியகத்தில் (BIS) சான்றிதழ் முக்கியமாக இருந்து வருகிறது. ஆனால் (BIS) சான்றிதழ் நீக்குவதாக மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்தது. அதன்மூலம், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைகளில் வருடத்திற்கு ஒரு முறை அதன் ஆபத்து சார்ந்த ஆய்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்