திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் நடிகர்கள் மட்டுமே வில்லனாக நடித்து வந்தனர். ஆனால் மென்மையான குணங்கள் கொண்ட பெண்களும் வில்லியாக நடித்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று உணர்த்திய திரைப்படம் தான் படையப்பா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், சௌந்தர்யா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிட்டவர் தான் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
கதைக்கு உயிர் கொடுத்தவர் இவர் தான். மேலும் ரஜினிக்கு மகளாக இரண்டு பேர் நடித்திருந்தார்கள். அதில் ஒருவர் நம்ம விஜயகுமாரின் மகளான ப்ரீத்தா நடித்திருப்பார். அதே போல் இளைய மகளாக அனிதா வெங்கட் நடித்திருந்தார். தற்போது இந்த அனிதா வெங்கட் எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் தெரியுமா?.., படையப்பா படத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகிய அனிதா ஒரு பாடகியாம்.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியுள்ளார். ஏன் காஞ்சனா 2, கருப்பன் என உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். தற்போது இவர் ஜி தமிழ் முதல் விஜய் டிவி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழும் சரஸ்வதியும், ஆஹா கல்யாணம் உள்ளிட்ட சீரியலில் நடித்து வருகிறார். அவருடைய ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.